Enable Javscript for better performance
9 இல் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    9 இல் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

    By கோவில்பட்டி  |   Published on : 05th June 2015 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் இம்மாதம் 9 ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா மற்றும் பசுவந்தனை சாலையில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் 9 ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் ஜோதி தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 2 டாஸ்மாக் கடைகளையும் ஜூலை 18 ஆம் தேதிக்குள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மாற்றம் செய்து தரப்படும் என டாஸ்மாக் உதவி மேலாளர் உறுதியளித்தார். இதையடுத்து 9 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

     இதில், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், உதவிச் செயலர் ராஜேந்திரன், நகரச் செயலர் பரமராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai