சுடச்சுட

    

    கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவர் உள்பட இருவரை தாக்கியதாக 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் து.கார்த்திக்(23). இவரது நண்பர் பாரதி நகர் ஓடைத் தெருவைச் சேர்ந்த மோ.ராஜா(24). இவர், தனியார் செல்லிடைப்பேசி நிறுவன விற்பனை பிரதிநிதி.

    இவர்கள் இருவரும் பசுவந்தனை சாலை - வக்கீல் தெரு சந்திப்பில் வெள்ளிக்கிழமை பைக்கை நிறுத்தும்போது அப்பகுதியில் நின்றிருந்த 6 பேர் கொண்ட கும்பலுடன் தகராறு ஏற்பட்டதாம். அப்போது 6 பேரும் சேர்ந்து ராஜாவையும், கார்த்திக்கையும் கம்பால் தாக்கினார்களாம்.

     இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai