Enable Javscript for better performance
இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் வட்டம், படர்ந்தபுளியில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இளைஞர் பெருமன்ற வட்டக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் கிளைச் செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டச் செயலர் லெனின், வட்டக்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், வட்டச் செயலர் நல்லையா ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில், சோலையப்பன், அப்பணசாமி, தம்பிராஜன், பாரதி, செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai