Enable Javscript for better performance
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி

    By கோவில்பட்டி  |   Published on : 06th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) செளந்தரநாயகி தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை மெர்சி ரோசலின்ட், தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை நடவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது.

    தொடர்ந்து, பசுமைப் படை மாணவர்களுக்கு துணியிலான புத்தகப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கோவில்பட்டி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பசுமைப் படை மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை ஏ.எஸ்.பி. முரளிரம்பா கொடியசைத்து தொடங்கிவைத்தார். பள்ளி முன்பிருந்து தொடங்கி எட்டயபுரம் சாலை, புதுரோடு வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

    இதில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கணேசன், செண்பகக்கனி, ரோட்டரி சங்கத் தலைவர் பரமேஸ்வரன், கோவில்பட்டி பயிலும் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், பள்ளி ஆய்வாளர் செல்லகுருசாமி மற்றும் பசுமைப் படை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பசுமைப் படை ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். வில்லிசேரி அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் (பொ) கண்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai