சுடச்சுட

    

    கராத்தே போட்டி: நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 06th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினத்தில் ஞாயிறு, மற்றும் திங்கள்கிழமைகளில் (ஜூன் 7, 8) நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஞாயிறுக்கிழமையும் (ஜூன் 7),  திங்கள்கிழமையும் (ஜூன் 8) ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்த முகாமில் பங்கேற்க விருப்பும் இம்மாவட்ட இளைஞர்கள் கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி அல்லது திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை 0431 - 2412254 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai