சுடச்சுட

    

    கராத்தே போட்டி: நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம்

    By சாத்தான்குளம்  |   Published on : 06th June 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச கராத்தேப் போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    கோவா மாநிலம் அந்போரா பர்தலினில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    தமிழகத்திலிருந்து சென்ற நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவர் மாஸ்டர் டென்னிசன், புனித லூக்கா சிறுவர் மேம்பாட்டு மைய மாணவர்கள் இருவர் என 3 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

    இதில் மாணவர்கள் மாஸ்டர் டென்னிசனும், பிரவின்குமார் கட்டா, குமிட்டி ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கமும், மாணவர் அருள் கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும், குமிட்டி பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சிறப்பிடம் பெற்றவர்களை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெபசிங் தியாகராஜ் நட்டர்ஜி, ஆசிரியர் ராமசாமி, சாம்நட்டர்ஜி, நாசரேத் புனித லூக்கா சிறுவர் மேம்பாட்டு மைய திட்ட இயக்குநர் தாமஸ் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai