சுடச்சுட

    

    கார் மோதி சிறுவன் இறந்த வழக்கு: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

    By சாத்தான்குளம்  |   Published on : 06th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே கார் மோதி சிறுவன் இறந்த வழக்கில் கார் ஓட்டுநருக்கு ஓராண்டு சிறையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, சாத்தான்குளம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

    கொம்பன்குளத்தைச் சேர்ந்த இசக்கி மகன் பேச்சிமுத்து (10). கடந்த 9.8.2008இல் தந்தையுடன் பேச்சிமுத்து, சாத்தான்குளம் - திருச்செந்தூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது பணகுடியிலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற கார் அவர் மீது மோதியதாம். இதில் பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் பணகுடி குருசடி புண்ணியவதிபுரம் தா. அன்புவை(37)  கைது செய்தனர். இந்த வழக்கு சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி செல்வன்ஜேசுராஜன், கார் ஓட்டுநர் அன்புக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai