சுடச்சுட

  

  கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 06th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

  நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவுக்கு 3 அல்லது 4 மடங்கு அபராத விதிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு எடையாளர்களை நியமிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 100 சதவீத ரேஷன் பொருள்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 சதவீத ஆய்வு என்ற பெயரில் கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்களை பழிவாங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

  கோவில்பட்டி ரயில் நிலையம் முன் தொடங்கிய இப்பேரணி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நிறைவடைந்தது.

  பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் குமாரவேல் தலைமை வகித்தார். செயலர் ரமேஷ் இம்மானுவேல் முன்னிலை வகித்தார்.

  சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அசோகன், அருணாசலப்பெருமாள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலர் கண்ணுசாமி, அனைத்துப் பணியாளர் சங்க ஒன்றிய இணைச் செயலர் ஜெயக்குமார், சங்கப் பொருளாளர் சங்கரநாராயணன் உள்பட கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai