சுடச்சுட

  

  கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில், பெளர்ணமி நூல் வலம்  நடைபெற்றது.

  இதில்,கடையநல்லூர் சேயான் இப்ராகிம் எழுதிய எண்ணப்பறவை என்ற நூல் பற்றிய கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார். சங்கரகுமார் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விநாயகசுந்தரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியை கெங்கம்மாள், தமிழாசிரியை இந்திரா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உலகநாதன், ஆசிரியை அமலிசெல்வராணி ஆகியோர் நூல்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

  தொடர்ந்து, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில், அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கல்வித் துறையில் சாதனை படைத்த கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயகுமாருக்கு சாதனை சுடர் விருதை ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ் வழங்கிப் பேசினார்.  விழாவில், மாவட்ட பசுமைப் படை பொறுப்பாளர் பாலகணேஷ், சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் எட்டப்பன், கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தன், திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி, அரசு கிளை நூலகர் பூல்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ரோட்டரி சங்க துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி வரவேற்றார். ஜே.சி.ஐ. டயனமிக் செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai