Enable Javscript for better performance
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு

    By கோவில்பட்டி  |   Published on : 06th June 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

    மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி ரயில்வே டிக்கெட் இயந்திரம், ரயில்வே நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், டிக்கெட் வழங்கும் இடம், ரயில் நிலைய மேலாளர் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்த கோட்ட மேலாளர், கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் இங்கு நிற்காமல் செல்லும் ரயில்களின் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களை சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர்க் குழாய்களில் வீணாகச் செல்லும் குடிநீரை தடுக்கவும், போதுமான குடிநீர்க் குழாய்களை பொருத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    அப்போது கோவில்பட்டி ரயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் போதுமான மேற்கூரைகளை அமைக்க வேண்டும், முதல் நடைமேடையில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடைமேடையை உயர்த்த வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள், கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆய்வின்போது, மூத்த பொறியாளர் சாம்சன் விஜயகுமார், உதவி கோட்டப் பொறியாளர் உத்தமநாதன், போக்குவரத்து ஆய்வாளர் சேது, கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரி கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் யூசுப் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai