சுடச்சுட

  

  சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  By கோவில்பட்டி  |   Published on : 06th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கோவில்பட்டி வட்டக் கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு இந்திய உணவு கழகத்திடமிருந்து பெறப்படும் பொருள்களை 50 கிலோ மூட்டைகளாக எடையிட்டு சமச்சீர் செய்து பொது விநியோக திட்டப் பணிக்காக ரேஷன் கடைகளுக்கு மே 21ஆம் தேதிமுதல் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது.

  இதையடுத்து கோவில்பட்டி வட்ட கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள், சமச்சீர் செய்யும் பணியை அமல்படுத்தினால் அதற்கு ஏற்ப ஏற்று கூலியையும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  இதை வலியுறுத்தி மே 21ஆம் தேதிமுதல் கிடங்குக்கு வரும் மூட்டைகளை இறக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை ஜூன் 5ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவரை வழக்கம் போல் பணியில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்தனர்.

  இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 5) முதல் அமுதம் சில்லறை அங்காடி மற்றும் கூட்டுறவு துறை அங்காடிகளுக்கு சமச்சீர் செய்யும் பணியை செய்யாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சமச்சீர் செய்யும் பணிக்கு ஏற்ப டன்னுக்கு ரூ.40.12 வழங்கப்பட்டு வருவதை உயர்த்தி வழங்கும்வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai