Enable Javscript for better performance
தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழுக் கூட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 06th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ் சுந்தர்சிங், புறநகர் மாவட்டத் தலைவர் தங்கமணி, மாநகர் மாவட்டத் தலைவர் ரோபி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மீனவரணி மாநில இணைச் செயலர் ரிச்சர்ட் தேவசகாயம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும்; அனல் மின்நிலையம், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணிச் செயலர் அஜீஸ்,  மாவட்ட அமைப்புச் செயலர் பிரேம்பாண்டியன், புறநகர் மாவட்ட தொழிற்சங்கச் செயலர் செல்வம்,  ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலர் ஹரிராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai