சுடச்சுட

  

  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பி. கதிர்வேல் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஓ.எஸ். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். இதில், மாநில இணைச் செயலர் முரளிதரன், மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், ரவிகுமார், அருண், தங்கத்தாய், கண்ணன், தங்கமணி, சிங்கப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai