சுடச்சுட

  

  சென்னை ஐஐடியில், அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஐஐடி முதல்வரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதில் வழக்குரைஞர்கள் சந்தனசேகர், அதிசயக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

  இதே கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரெஜிஸ்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் ராமர், எழுத்தாளர் சங்கச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  பணி புறக்கணிப்பு:திருச்செந்தூரில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜே.எஸ்.டி.சாத்ராக் தலைமை வகித்தார். செயலர் சி.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விபத்தில் காயமடைந்த சங்க உறுப்பினர் எம்.ஆனந்தின் சகோதரர் புகார் மனு கொடுக்கும்போது, வழக்கை தள்ளுபடி செய்யும் வகையில் காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கையெழுத்து வாங்கியுள்ளதாகக் கண்டித்தும், வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai