சுடச்சுட

  

  தொழிற்சாலைகளின் மாசுக் கட்டுப்பாடுகுறித்து ஆய்வறிக்கை

  By தூத்துக்குடி  |   Published on : 07th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாடுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

  மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ம.  ரவிகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  சார்-ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜ், மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மீனவர் கன்னிமுத்து பேசுகையில், விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான டீசல் குறித்த விவரங்களை, வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ரோச் பூங்கா பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  மீனவர் ரூஸ்வேல்ட் பேசுகையில், மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீனவர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்; மீனவ கூட்டுறவு சம்மேளனங்கள் முன்பு வழங்கப்பட்டதுபோல் மீன்பிடி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றார்.

  இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், முதல்கட்டமாக தருவைக்குளம் மற்றும் கொம்புத்துறையில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.

  தருவைக்குளம் ஊராட்சித் தலைவர் மகாராஜன் பேசுகையில், தருவைக்குளத்தில் அரசு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,  தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம் தொடங்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளே வருகின்றனர். அனுமதி கொடுக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தினர் யாரும் வருவதில்லை. இம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளால் அதிகளவு காற்று மற்றும் நீர் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

  தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் மாசுபடுதல் தொடர்பான விரிவான ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.

  கூட்டத்தின்போது, வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும், மீனவர் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தில் பெண்ணுக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai