Enable Javscript for better performance
மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து ஆட்சியரிடம் மனு

    By தூத்துக்குடி  |   Published on : 06th June 2015 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மின் வாரிய அதிகாரிகளைக் கண்டித்து அந்தோணியார்புரம் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

    இதுதொடர்பாக, ஆலயத்தின் தலைவர் மிக்கேல் ஜெபமாலை, செயலர் சிலுவை அந்தோணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

    அந்தோணியார்புரத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்துக்கு சொந்தமான இல்லத்தின் வளாகப் பகுதியில், அதிகளவில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மின் வாரிய அதிகாரிகள், புதிய மின் இணைப்பு வழங்கும் பணிகளுக்காக, இந்த வளாகத்திலுள்ள மரங்களை அனுமதி பெறாமல் வெட்டிவிட்டனர். இதனால் கட்டட சுவர்களும் இடிந்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மின் வாரியத்தினரிடம் கேட்டபோது சரியான பதில் சொல்ல மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக, புதுக்கோட்டை காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடும் பெற்றுத்தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai