சுடச்சுட

  

  கோவில்பட்டியையடுத்த மைப்பாறை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  மைப்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதியில் மழை வளம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  இதையொட்டி கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் சுவாமி,அம்பாளுக்கு 21 வகை மூலிகைகளைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஜோதிலிங்கம் பட்டு மஹால் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai