Enable Javscript for better performance
விளாத்திகுளம் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு

    By விளாத்திகுளம்  |   Published on : 06th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே மெட்டில்பட்டியில் உள்ள ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மெட்டில்பட்டியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமை இரவு பூஜைகளை முடித்த பூசாரி பூவலிங்கம், வழக்கம்போல் கோயில் இரும்புக் கதவுகளை பூட்டிச் சென்றார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் கோயில் நடைதிறக்க சென்றபோது கதவு பூட்டு, அம்மன் சன்னதி இரும்புக் கதவு பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி சங்கிலி, கம்மல், மூக்குத்தி, வெள்ளி கிரீடம், கண்மலர் உள்ளிட்டவைகளும், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம், ஒலிப்பெருக்கி சாதனங்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள்   திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai