சுடச்சுட

    

    ஆத்தூரில் 2,317 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

    By ஆறுமுகனேரி  |   Published on : 07th June 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூரில், 2,317 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் வழங்கினார்.

    இதற்கான விழாவில், வட்டாட்சியர் சொ.வெங்கடாசலம், சிறப்பு செயலாக்க திட்ட துணை வட்டாட்சியர் லட்சுமிகணேஷ், பேரூராட்சித் தலைவர் எம்.பி.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அதிமுக ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ஏ.எம்.எஸ்.ஷேக் தாவூது, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், நகரச் செயலர் கே.பி.ராஜகோபால், பேரூராட்சி  துணைத் தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் ரா.கோபாலகிருஷ்ணன், ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் வசந்தா பெர்னாண்டோ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai