சுடச்சுட

    

    கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 07th June 2015 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    24ஆவது வார்டுக்கு உள்பட்ட தட்சிணாமூர்த்தி கோயில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட பகிர்மானக் குழாயின் இணைப்புக்கு மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது. சீனிவாச அக்ரஹார தெருவுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். டால்துரை பங்களா தெருவில் உள்ள வாருகாலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும். இரட்டை விநாயகர் கோயில் தெருவில் வாருகாலை சுத்தப்படுத்த வேண்டும்.

    இளையரசனேந்தல் சாலை சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பிரதான சாலை தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், நகரச் செயலர் பரமராஜ் ஆகியோர் பேசினர்.

    நகர உதவிச் செயலர்கள் முனியசாமி, சங்கரப்பன், பாபு, நகரக் குழு உறுப்பினர் ஜோசப், சீனிவாசன், மாதர் சங்க நகரத் தலைவர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai