சுடச்சுட

    

    ஆறுமுகனேரி அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருப்பசாமி, ஆறுமுகனேரியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்த போது அவருக்கும் இந்தச் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருக்கமாகப் பழகியதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து கருப்பசாமியிடம் கூறவே, கடந்த 4 ஆம் தேதி சிறுமியை திருச்செந்தூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்தாராம். பின்னர் பழைய காயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தாராம். இதற்கிடையில் சிறுமியைக் காணவில்லை என ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் ஆறுமுகனேரி காமராஜபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை கருப்பசாமி அழைத்து வந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று கருப்பசாமியை கைது செய்தனர். கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கருப்பசாமி மீது வழக்குப் பதிந்தனர். சிறுமியை தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai