சுடச்சுட

  

  தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 727 பேருக்கு உடனடி பணிநியமன ஆணை

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 07th June 2015 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாயர்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 727 பேருக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட புதுவாழ்வு திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் சாயர்புரம் போப் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  முகாமில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளிட்ட ஏறத்தாழ 87 நிறுவனங்கள் பங்கேற்றன. மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் முகாமைத் தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில்,  இளைஞர்கள் தங்களுக்கு முதலில் கிடைக்கும் வேலையைப் பெற்று முதல் படிக்கட்டில் ஏறிக் கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து உங்கள் கனவை நனவாக்கும் முயற்சியை தொடங்குங்கள் என்றார் அவர்.

  இந்த முகாமில் சுமார் 5400 பேர் கலந்துகொண்டனர். இதில் 727 பேருக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணைகளை ஆட்சியர் ம. ரவிகுமார் வழங்கினார். 1300 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதேபோல,  தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமும் முகாமில் பங்கேற்று வெளி நாடுகளில் பணிபுரிய ஆள்களை தேர்வு செய்தது. மேலும், திறன் வளர்ச்சியை மேம்படுத்துதல், தனியாக தொழில் முனைவோருக்கு கடன் வழங்குதல் ஆகியவற்றுக்கும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார்ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராஜ்,  சாயர்புரம் பேரூராட்சித் தலைவி எடிசி தினகரன், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிச்சையா, போப் கல்லூரி முதல்வர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமணன்,  மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செழியன்,  பாக்கியம் லீலா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai