Enable Javscript for better performance
தொழிற்சாலைகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தொழிற்சாலைகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    By தூத்துக்குடி  |   Published on : 07th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.

     தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகள் நடும் பணியை தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

     இதேபோல, புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் மின் உற்பத்தி மையத்திலும்,  திரேஸ்புரம் மற்றும் இஎஸ்ஐ.மருத்துவமனை வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிகளில், மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் ஜெயபாரதி மனோகர், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் சாந்தி, முத்தழகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஸ்பிக் நிறுவனத்தில்:  தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் பெர்டிலைசர்ஸ் உரத் தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் துறை துணை பொறியாளர் கண்ணன் மரக்கன்று நடும் விழாவைத் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, உலகச் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் பெர்டிலைசர்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளும், தொழிலாளர்களும் எடுத்துக் கொண்டார்கள். இதையொட்டி ஆலை வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஆறுமுகனேரி: சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதையொட்டி நிறுவன ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஒ.பி தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதையடுத்து பழையகாயல் புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியில் மரக்கன்று நடும் விழாவும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை ஐôன் பால் தலைமை வகித்தார். டி.சி.டபிள்யூ நிறுவன செயல் உதவித் தலைவர் டாக்டர். மே.சி. மேகநாதன் மரக்கன்றுகளை நட்டு மாணவர், மாணவிகள் 300 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதுபோல் ஆறுமுகனேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பள்ளி மாணவிகளுக்கு 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் (காஸ்டிக் சோடா) சுபாஷ் டண் டன் பழையகாயல் பள்ளித் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜனோ மற்றும் ஆறுமுகனேரி பள்ளித் தலைமை ஆசிரியர் ஹேமலதாஅனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:  பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தின் மரக்கன்றுகளை பள்ளியின் ஆட்சி மன்றக்குழுத் தலைவர் பொன்னுசாமி, தாளாளர் ரா.விஜயகுமாரி, தலைமையாசிரியை கிரேஸ் கமலம் ஆகியோர் நட்டனர். சுற்றுச்சூழல் குறித்து ஆசிரியை லதா, மாணவிகள் பேபி ஷாலினி, கீர்த்திகா ஆகியோர் பேசினர்.

    மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியை ஜடாபிரின்சஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai