சுடச்சுட

    

    மக்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: மேயர்

    By தூத்துக்குடி  |   Published on : 07th June 2015 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையின் வடபகுதியானது முள்புதர்கள் சூழ்ந்து இருப்பதால், அந்தப் பகுதியை சுத்தப்படுத்தி தருமாறு மக்களிடம் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழல் இருந்து வந்ததால் பக்கிள் ஓடையின் தென்புறம் ஆங்காங்கே காணப்பட்ட மணல் திட்டுகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டடக் கழிவுகள் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்பட்ட கழிவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பக்கிள் ஓடையின் வடபுறம் பகுதியில் புதிதாக தாற்காலிக அமைக்கப்பட்டு வரும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடை முதல் 3 ஆவது கேட் அருள்ராஜ் மருத்துவமனை வரை சீர்படுத்தப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக விவிடி பூங்கா அருகேயுள்ள அம்மா உணவகத்துக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகை தருவதால், அப்பகுதியில் காணப்படும் முள்செடிகள் அகற்றப்பட்டு மணல் திட்டுகள் சமன் செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணிகளை சிலர் தவறான நோக்கத்தில் தடுத்து நிறுத்தியதோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு விளம்பரம் தேடும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை தெரிவித்து பணியை நிறுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற தவறான செயல்கள் தொடருமானால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai