சுடச்சுட

  

  நாசரேத் அருகே உள்ள  மேலவெள்ளமடம் வேதநகர் பரி.அந்திரேயா ஆலய 14 ஆவது கோபுர பிரதிஷ்டைப் பண்டிகை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

   முதல் நாள் இரவு நடைபெற்ற  கன்வென்ஷன் கூட்டத்தில்  விருதுநகர், கிராம மிஷனெரி இயக்க ஊழியர் டேவிட் கணேசன் செய்தி கொடுத்தார்.  இரண்டாவது நாள் மாலை ஆயத்த ஆராதனையும், பரி.ஞானஸ்நான ஆராதனையும் சேகரகுரு வெல்ற்றன்ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையர் ஜெசுசகாயம்  கலந்துகொண்டு சிறப்பு செய்தி கொடுத்தார்.

   நிறைவு நாளன்று பண்டிகை ஆராதனையும், பரி.நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆழ்வார்திருநகரி சேகரகுரு ஹென்றிஜீவானந்தம் செய்தி கொடுத்தார். பின்னர் அசன விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை வெள்ளமடம் சேகரகுரு வெல்ற்றன் ஜோசப் தலைமையில் சபை ஊழியர் பிரபாகர் மோசஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai