சுடச்சுட

    

    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மீது மினி கண்டெய்னர் லாரி மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், கருங்குளம் வட்டம், வெட்டுகாட்டுவிளையைச் சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஸ்ரீகுமார் (44). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், ஓட்டி வந்த பேருந்து, மார்த்தாண்டத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாம்.

    பேருந்து, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்ததாம்.

    அப்போது களியக்காவிளையிலிருந்து கடலூருக்குச் சென்று கொண்டிருந்த மினி கண்டெய்னர் லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில், லாரி ஓட்டுநர் சிதம்பரம், சூரியமங்கலம், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த பா. கண்ணன் (33), கண்டெய்னர் நடத்துநர் அதே பகுதியைச் சேர்ந்த த. முருகன் (44) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

    காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai