சுடச்சுட

    

    ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய கூலித் தொழிலாளி கைது

    By கோவில்பட்டி,  |   Published on : 08th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக, ஆட்டோவைச் சேதப்படுத்தி, அதன் ஓட்டுநரைத் தாக்கிய கூலித் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    ராஜாபுதுக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனகராஜ் (28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் கூலித் தொழிலாளி செந்தில்குமார் (30) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

    இந்நிலையில் சனிக்கிழமை இரவு கனகராஜுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து செந்தில்குமார் ஆட்டோவைச் சேதப்படுத்தி ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கினாராம்.

    இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து கூலித் தொழிலாளி செந்தில்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai