சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் ஏஐடியூசி கையெழுத்து இயக்கப் பிரசாரம்

    By எட்டயபுரம்,  |   Published on : 08th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரத்தில் ஏஐடியூசி தெரு வியாபாரத் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு சார்பில் பேருந்து நிலையம் முன் கையெழுத்து இயக்கப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    மார்ச் 2014ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஓழுங்குபடுத்துதல் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். தெரு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதிகளில் நகர வியாபாரக் குழு அமைக்க வேண்டும். தெரு வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பையும்,

    புகைப்படம் ஓட்டிய சான்றிதழ்களையும் அதிகாரிகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கப் பிரசாரத்துக்கு சங்க உறுப்பினர் பூக்கடை மகாலிங்கம் தலைமை வகித்தார்.

    கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயராம் முதல் கையெழுத்திட்டு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தார்.

    ஏஐடியூசி மாவட்ட ஓருங்கிணைப்பாளர் தமிழரசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலர் சேது, தொமுசி ரகுநாதன் கல்வி அறக்கட்டளைச் செயலர் இளசைமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் நல்லையா, ஏஐடியூசி ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலர் முனியராஜ், பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கப் பிரசாரக் குழுவினர் நகரின் பல்வறு பகுதிகளைச் சேர்ந்த தெரு வியாபாரிகளிடம் நேரில் சென்று கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai