Enable Javscript for better performance
ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: மனு அளிக்க 11வரை அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: மனு அளிக்க 11வரை அவகாசம்

    By தூத்துக்குடி,  |   Published on : 08th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இம்மாதம் 11ஆம் தேதிக்குள் மனு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் நாள் கூட்டம் இம்மாதம் 24 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். இக் கூட்டத்தில் சென்னையில் உள்ள ஓய்வூதிய இயக்குநர் கலந்துகொள்கிறார். எனவே, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    அப்போது, ஓய்வூதியர் கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலகத்தின் பெயர் மற்றும் பதவி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது போன்ற விவரங்களுடன் இம்மாதம் 11 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628 101 என்ற முகவரிக்கு இரண்டு பிரதிகளில் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் மனுக்கள் பரிசீலிக்கப்படாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai