காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி பள்ளி திறப்பு
By கோவில்பட்டி, | Published on : 08th June 2015 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி (சி.பி.எஸ்.இ.) பள்ளி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட இப்பள்ளி திறப்பு விழாவுக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.ஆர்.ராஜசேகர் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், நாடார் உறவின்முறை சங்கச் செயலர் எஸ்.ஆர்.எம்.கே. ராஜேந்திரபிரசாத், பொருளாளர் செல்வராஜ், தொழிலதிபர் திலகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கட்டடத்தை ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி.யும், கல்வெட்டை கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ.வும் திறந்து வைத்தனர்.
உமாதேவி ராஜசேகர், ஜெயலட்சுமி பழனிசெல்வம், ஸ்வர்ணலட்சுமி கண்ணப்பன், கல்யாணி ராஜேந்திரபிரசாத், விமலாதேவி திலகரத்தினம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
நிகழ்ச்சியில், பள்ளிச் செயலர்கள் ஜெயபாலன் (நாடார் மேல்நிலைப் பள்ளி), மாணிக்கவாசகம் (நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி), செந்தில்கனிராஜா (காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), கண்ணன் (ஐ.சி.எம். பள்ளி), கணேசப்பாண்டியன் (நாடார் நடுநிலைப் பள்ளி), எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் லூயிஸ் இன்பராஜ், மின்வாரிய ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் ஷீலாராணி, நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன், அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் ராமானுஜம் கணேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, ஜெமினி என்ற அருணாசலசாமி, ஒன்றிய உறுப்பினர் பாலமுருகன் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் கண்ணப்பன் வரவேற்றார். காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.