சுடச்சுட

    

    தொழிற்பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் அளிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 08th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு சார்பில் தாமிரமுத்துக்கள் திட்டம் என்றத் திட்டம் ஐஎல்எஃப்எஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி இரண்டு மாத பயிற்சியாக பல்வேறு வகையான தொழிற் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    இதையடுத்து, பயிற்சி வகுப்புகளின் இறுதி நாளான சனிக்கிழமை பயிற்சி முடித்த 148 மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி பிரிவு துணைத் தலைவர் செந்தில் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் நிறுவன தலைமை மருத்துவர் மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவுத் தலைவர் கைலாசம், மனிதவள உதவி பொதுமேலாளர் சோனிகா முரளிதரன், ஏவிஎம் அசோஸியேட்ஸ் மனிதவள உதவி பொதுமேலாளர் ராம்குமாரி பிரதீப், புனித இருதய மருத்துவமனை நிர்வாகி லிஸ் ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai