சுடச்சுட

  

  ஆறுமுகனேரி மடத்துவிளை சந்தன சமநடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் கணிணி அறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு ஆறுமுகனேரி பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமை வகித்தார். ஊர் கமிட்டித் தலைவர் அமிர்தம் பர்னான்டோ முன்னிலை வகித்தார். ராஜமன்னியபுரம் புனித அந்தோனியார் ஆலய கமிட்டி தலைவர் சந்தானம், ஆசிரியை லூசியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பங்கு தந்தை ஸ்டார்வின் அடிகளார் கட்டடங்களை அர்ச்சித்தார். அருள்சகோதரி புஷ்பம் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியை அருள்சகோதரி மலர் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai