சுடச்சுட

  

  சாத்தான்குளம் அருகேயுள்ள வேலாயுதபுரம் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு முதியவர் ஒருவர் தர்மம் எடுத்து கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.

  ஆலங்கிணற்றைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (60). இவர், அப்பகுதியில் தர்மம் எடுத்து வருகிறார். இவர், தான் தர்மம் எடுத்து சேர்த்த பணத்தில் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவர், மாணவிகளுக்கு நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர், மாணவிகளுக்கு அவர் நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

  அவரை பள்ளித் தாளாளர் எட்வர்ட் ஜே அடிகள், தலைமை ஆசிரியை ஜெசுராஜகுமாரி, உதவி ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர். இதேபோல் அங்குள்ள டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் அவர் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai