சுடச்சுட

    

    மாநில இறகுப்பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு

    By தூத்துக்குடி,  |   Published on : 08th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், தமிழ்நாடு மாநில இறகுப்பந்து அமைப்பும், தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இறகுபந்து அமைப்பு ஆகிவை இணைந்து நடத்திய மாநில அளவிலான இறகுபந்து போட்டிகள் தூத்துக்குடியில் 4 நாள்கள் நடைபெற்றன.

    இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 600 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 17 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்றும், 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தரவரிசை அடிப்படையில் 9 பிரிவுகளிலும் முதல் 9 இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை செயல் அலுவலர் பங்கஜ்குமார் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில இறகுப்பந்து அமைப்பு மாநில துணைத் தலைவர் மோகன்குமார், இணைச் செயலர் ராஜ் மோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம், தூத்துக்குடி மாவட்ட இறகுபந்து அமைப்பு தலைவர் வேல்சங்கர், போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரேம் வெற்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai