சுடச்சுட

  

  கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் காரைக்குடி ஷியான் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

  கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பாரதி ஹாக்கி கிளப் சார்பில் 16ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திட்டங்குளம் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் 17 அணிகள் பங்கேற்றன.

  3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கோவை என்.ஜி.பி. அணியும் மோதின. இதில், 6-0 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  பின்னர், நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில், வேலூர் ஹாக்கி அகாதெமி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காரைக்குடி ஷியான் ஹாக்கி கிளப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், காரைக்குடி ஷியாம் ஹாக்கி கிளப் அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் காரைக்குடி அணி வெற்றி பெற்றது.

  போட்டியின் நடுவர்களாக செந்தில், ராஜ்குமார், சிங்கராஜ், மாதேஷ்குமார், சீனிவாசன், ராமானுஜம் ஆகியோர் செயல்பட்டனர்.

  பரிசளிப்பு விழாவுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை வகித்தார். காரைக்குடி ஷியான் ஹாக்கி கிளப் அணிக்கு ரூ.10,000 மற்றும் மாடசாமி - அய்யம்மாள் நினைவு சுழற்கோப்பையை ஊர்த் தலைவர் பொன்ராஜ் வழங்கினார். 2ஆவது பரிசு பெற்ற சென்னை லயோலா கல்லூரி அணிக்கு ரூ. 7,000 மற்றும் சின்னச்சாமி நினைவு சுழற்கோப்பையை பி.எஸ்.என்.எல். அதிகாரி விஜயகுமார் வழங்கினார். 3ஆவது பரிசாக கோயம்புத்தூர் என்.ஜி.பி. அணியினருக்கு ரூ.5,000 மற்றும் சுந்தரலிங்கம் நினைவு சுழற்கோப்பையை தொழிலதிபர்கள் அய்யாத்துரை மற்றும் செல்வம் வழங்கினர். 4ஆவது பரிசாக வேலூர் ஹாக்கி அகாதெமி அணிக்கு ரூ.3,000 மற்றும் விஜயகுமார் - தனலட்சுமி நினைவு சுழற்கோப்பையை தொழிலதிபர் சண்முகராஜ் வழங்கினார்.

  பாரதி ஹாக்கி கிளப் மேலாளர் உமாசங்கர் வரவேற்றார். துணைச் செயலர் அழகுதுரை நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai