சுடச்சுட

  

  நாசரேத் அருகே உள்ள வாழையடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

  முதல் நாளான திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீ குருசாமி சுவாமிக்கு முதல் பூஜை, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு காலபூஜை, இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு மாகாப்பு தீபாராதனை நடைபெறுகின்றன.

  செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை 8.30 மணிக்கு வாழையடி ஸ்ரீசித்திபுத்தி விநாயகர் கோயிலிலிருந்து அம்பாளுக்கு பால்குடம் எடுத்து வருதல், காலை 9.30 மணிக்கு யாகசாலை பூஜை, பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு உச்சிகால பூஜை, பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு குலகன்னிக்கு மஹா சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு சிறப்பு விளக்கு பூஜை, இரவு 12 மணிக்கு அம்பாளுக்கு உச்சிகாலபூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

  புதன்கிழமை (ஜூன்10) காலை 8.30 மணிக்கு பால் பொங்குதல், அம்பாள் கும்பம் ஊர் பவனி கோயிலுக்கு வந்து மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவுபெறுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai