சுடச்சுட

  

  அரசு நிதி ஒதுக்கியவுடன் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கும்

  By தூத்துக்குடி  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு நிதி ஒதுக்கியவுடன் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணிகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

  இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

  தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 5,334 பேர் பங்கேற்றனர். இதில், 723 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 1,282 பேரை நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன. அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

  இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 79 தனியார் பள்ளிகளில் 5,742 பேரை ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதில், 166 பேர் எல்கேஜியிலும், 8 பேர் முதல் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதிக்குள் இந்த இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

  ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் வகையில் 2014-15 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அவர்களும் 4 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர்.

  பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் இதுவரை கிடைக்கவில்லை. அரசு நிதி ஒதுக்கியவுடன் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கும். தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு 583 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசிதழில் இந்த தகவல்கள் ஏற்றப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும்.

  தூத்துக்குடியில் துறைமுக புறவழிச்சாலை - திருச்செந்தூர் சாலை இடையே மதுரை செல்லும் சாலையில் வலதுபுறம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக 125 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நிதி வந்தவுடன் அப்பணிகள் நடைபெறும் என்றார் அவர்.

  இதையடுத்து, சாலை விபத்தில் மரணம் அடைந்த 2 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai