சுடச்சுட

  

  இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்

  By தூத்துக்குடி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

  தூத்துக்குடியில் காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை ஆகிய துறைகளில் பணிபுரிவர்களுக்கான பேரிடர் மேலாண்மை தற்காப்பு, மருத்துவம், சுற்றுப்புற சுகாதாரம் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாமை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:

  தூத்துக்குடி மாவட்டம், கடலோரப் பகுதியில் இருப்பதாலும், பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவது எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

  தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்தப் பயிற்சி முகாம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இயற்கை சீற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகள், விபத்து மற்றும் பேரழிவுகள் ஏற்படும்போது நாம் அதை எப்படி எதிர் கொள்வது, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது குறித்தும் பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியை எடுத்து கொண்ட நீங்கள் உங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கும் மற்ற அலுவலகப் பணியாளர்களுக்கும் பயிற்சியைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் இந்தப் பயிற்சி குறித்து தெரியவரும்.

  கடந்த காலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் மருத்துவத் துறை மூலம் உதவிகள் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எனவே பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தகுமார்,  மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் பானு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)  உமா, பயிற்சியாளர்கள் போஸ்கோ ராஜா,  லியாகத் அலிகான், சிவஞானம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் ஹரிபாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai