சுடச்சுட

  

  பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல் மற்றும் அவர்களுக்கான வழிகாட்டுதல் குறித்த விழா உடன்குடி நூலகத்தில் நடைபெற்றது.

  விழாவுக்கு பேரூராட்சித் தலைவி ஆயிஷா கல்லாசி தலைமை வகித்து தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நூலக வாசகர் வட்டத் தலைவர் பார்வதி சங்கர், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் அ. அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்லூரி பேராசிரியர் தயா, உடன்குடி ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி தலைமையாசிரியர் நல்லசிவன் ஆகியோர் பங்கேற்று வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

  இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர் சி. மகராஜமுத்துவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் க. சிவபாலன் வரவேற்றார். இதில்,பேராசிரியர் பாக்கியராஜ், நூலக புரவலர் மகராஜன், ச.அசோகன், நூலக உதவியாளர் சு. அமுதா உள்பட திரளானோர் பங்கேற்றனர். கிளை நூலகர் த. சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai