Enable Javscript for better performance
எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் வைகாசி மாத நாயன்மார்கள் குருபூஜை நடைபெற்றது.

    எட்டயபுரம் அடியவர்க்கு அடியவர்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் டி.வி.எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். பொருளாளர் ராமநாதன், செயலர் ஆவுடைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், நாயன்மார்களின் பெருமைகள், பெரியபுராணம் குறித்து விளக்கப்பட்டது. வைகாசி மாதத்தில் அடங்கிய முருக நாயனார், திருநீலகண்டயாழ்ப்பாணர், சேக்கிழார் பெருமான் உள்ளிட்ட 10 நாயன்மார்களுக்கு குருபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், திருநெல்வேலி சங்கரன் ஓதுவார் திருமுறை விண்ணப்பம் செய்தார். இதில் பங்கேற்ற சிவஅன்பர்கள் அனைவருக்கும் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்தின் செறிபொருள் என்ற நூல் வழங்கப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் உழவாரப் பணிகள் நடைபெற்றன. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பேச்சிமுத்து, பாலமுருகன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ருக்மணிசங்கரலிங்கம் வரவேற்றார். ஆசிரியர் தேவாமிர்தம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசு, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai