சுடச்சுட

  

  குலசேகரன்பட்டினத்தில் கிராம அறிவு மையம் திறப்பு

  By உடன்குடி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குலசேகரன்பட்டினத்தில் செட்கோ-சிசிஎப்சி குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்- கிராம முன்னேற்ற அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிராம அறிவு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

   விழாவுக்கு குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். சாத்தான்குளம் செட்கோ நிறுவன இயக்குநர் எப்.எக்ஸ்.ஆர்.ஜார்ஜ் முன்னிலை வகித்தார். அறிவு மையத்தை உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவி ஜெ.மல்லிகா திறந்துவைத்துப் பேசினார்.

   குலசேகரன்பட்டினம் திருஅருள் பள்ளித் தலைமையாசிரியர் சங்கரநாராயணன், ஹசனியா பள்ளித் தாளாளர் ஹிசார் சாகுல்ஹமீது, தலைமையாசிரியர் மீரான், உடன்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ரகுமான், வார்டு உறுப்பினர் மாணிக்கவாசகம், செட்கோ நிறுவன திட்ட மேலாளர்கள் சில்வெஸ்டர். பிராங்க்ளின் ஆகியோர் பேசினர்.

  குலசேகரன்பட்டினம் ஊராட்சி செயலர் ரசூல்தீன், செட்கோ களப் பணியாளர்கள் ஜெயசுதா, மகராசி உள்பட பலர் பங்கேற்றனர்.

  கிராம இளைஞர் மன்றத் தலைவர் முத்துஆனந்த் வரவேற்றார். கிராம முன்னேற்றக் குழு தலைவர் முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை செட்கோ சமூகப் பணியாளர்கள் செல்லம், இளையராணி ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai