Enable Javscript for better performance
கோவில்பட்டியில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

    By கோவில்பட்டி  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மேகி உள்பட 4 வகையான நூடுல்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், ஆய்வாளர்கள் முத்துக்குமார், பொன்ராஜ், மாரிச்சாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவில்பட்டி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட நூடுல்ஸ்களை விற்பனை செய்யாமல் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai