சுடச்சுட

    

    கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டத்தை தொடங்கக் கோரி கையெழுத்து இயக்கம்

    By கோவில்பட்டி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணியை விரைந்து தொடங்கக் கோரி பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நகராட்சி முன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் லட்சுமணக்குமார் தலைமை வகித்தார்.  மாநிலப் பொதுக்குழு பாலு, ஒன்றியத் தலைவர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சியில் 36 வார்டு மக்களிடமும் கையெழுத்து வாங்கி, மனு தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், மாவட்டத் தலைவர் லட்சுமணன், நிர்வாகிகள் சுப்பிரமணியராஜா, தினேஷ்குமார், பாலகிருஷ்ணன், முனியராஜ், முருகன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai