சுடச்சுட

    

    சகோதரியின் நிலத்தை மோசடியாக விற்றதாக தம்பதி மீது வழக்கு

    By சாத்தான்குளம்  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே சகோதரியின் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து விற்றதாக தம்பதி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

    தஞ்சைநகரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி ரத்தினமணி (52). இவருக்கு அதே ஊரில் 1 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை அவரது சகோதரர் ஆலங்குளத்தைச் சேர்ந்த தா. இம்மானுவேல், அவரது மனைவி இந்திரா ஆகியோர்  ரத்தினமணிக்கு தெரியாமல் போலியாக ஆவணம் தயாரித்து சரவணகுமார் என்பவருக்கு விற்றனராம்.

    இதுகுறித்து ரத்தினமணி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம். இதனால் அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த சாத்தான்குளம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் சாத்தான்குளம் ஆய்வாளர் விஜயகுமார், இம்மானுவேல், இந்திரா தம்பதி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai