சுடச்சுட

    

    சாகுபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1998ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர், மாணவிகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி டிரஸ்டிகளும், டிசிடபிள்யூ நிறுவன மூத்த பொது மேலாளருமான சி.சந்திரசேகரன் மற்றும் பொதுமேலாளர் ஆர்.பசுபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன், துணை முதல்வர்கள் பி.அருணாசலம், வனிதா வி.ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    இதில், முன்னாள் மாணவர்கள் பி.கார்த்திக் பாலச்சந்திரன், நரேஷ் பர்னான்டோ, ஜனனி, எம்.ராம்குமார், பே.இளங்கோபாபு, எஸ்.வி.சபரிஷ்குமார், செந்தில் கிருஷ்ணகுமார் உள்பட பல முன்னாள் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.  மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் என்.சுரேஷ் வரவேற்றார்.  எம்.பிரதாப் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai