சுடச்சுட

    

    சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஒய். எஸ். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

      துணைத் தலைவர் க. ஜெயராணி,ஆணையாளர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் ஜார்ஜ் தீர்மானங்களை வாசித்தார்.  கூட்டத்தில் 5 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஒன்றியத்தில் உள்ள 7 அலுவலக குடியிருப்பு வீடுகளை ஒன்றிய பொறியாளர் மூலம் ஆய்வு செய்து குடியிருக்கு தகுதி இல்லாத  குடியிருப்புகளை தகுதி நீக்கம் செய்வது என்பன உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மேரிபொன்மலர், மாசானமுத்து, சரோஜினி, சரோஜா, ரமேஷ், தங்கத்துரை, தங்கம், ரோஸ்மலர்,மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai