சுடச்சுட

  

  தூத்துக்குடியில் அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தொடக்கம்

  By தூத்துக்குடி  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கியது. போட்டியில், பெண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணி வெற்றிபெற்றது.

  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி கைப்பந்துப் போட்டி திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மெர்க்கன்டைல் வங்கியின் முதன்மை பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை தலைமை வகித்தார். துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் முன்னிலை வகித்தார். போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தொடங்கிவைத்தார். மேலும், பிரேசில் நாட்டில் நடைபெறும் கடற்கரை கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட புனித லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர் கெவின்ஸ்டனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

  நிகழ்ச்சியில், மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் விக்கிரமன், பொது மேலாளர்கள் குணசேகரன், கந்தவேலு, தேவதாஸ், துணைப் பொது மேலாளர் அன்பழகன், முன்னாள் உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ரேணியஸ் ஜேசுபாதம், உதவி ஆய்வாளர் ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  பெண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின. இதில், மும்பை மத்திய ரயில்வே அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப் போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதி  நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai