சுடச்சுட

  

  தூத்துக்குடியில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தூத்துக்குடி டீகே செஸ் மைய நிர்வாகி கற்பகவள்ளி வெளியிட்ட அறிக்கை:

  தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜூன் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. போட்டிகள் 9,11,13, 17 வயதுக்குள்பட்டோர் என்ற பிரிவுகளாக நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் பள்ளி மூலமாகவும் தனியாகவும் கலந்துகொள்ளலாம்.

  மாணவர், மாணவிகள் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது பள்ளி அடையாள அட்டை நகல் என ஏதாவது ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும், மாணவர்களுக்கு தனியாக முதல் 10 பரிசுகளும், மாணவிகளுக்கு தனியாக முதல் 5 பரிசுகளும் வழங்கப்படும்.

  போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

  14 ஆம் தேதி காலை 9 மணிவரை மட்டுமே நுழைவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த முடியும். அதற்கு முன்பு நுழைவுக் கட்டணம் செலுத்த விரும்புவோர் டீகே செஸ் மையம்,  நூருதின் காம்ப்ளக்ஸ், பெருமாள் கோயில் தெரு, தூத்துக்குடி, என்ற முகவரிக்கு சென்று காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை செலுத்தலாம்.

  மேலும் விவரங்களுக்கு 8220787822, 9487703266, 9486024960 என்ற  செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai