சுடச்சுட

    

    நாட்டுநலப் பணித்திட்ட முகாம் நிறைவு விழா

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா முறப்பநாடு கிராமத்தில் நடைபெற்றது.

    இம்முகாமில், கண் மற்றும் பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல், கோயில் சுத்தம் செய்தல், போதை பொருள் விழிப்புணர்வுப் பேரணி, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றன. மண்வளம், நீர் வளம் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் விளக்கமளித்தனர்.

    முகாம் நிறைவு விழாவுக்கு, வேளாண் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கீழபுத்தனேரி ஊராட்சித் தலைவர் பெருமாள், துணைத் தலைவர் மணிகண்டன், முறப்பநாடு கோவில்பத்து ஊராட்சித் தலைவர் முத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப் பணித்திட்ட செயலர் வெங்கடேசன் ஆண்டறிக்கை வாசித்தார். உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai