சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

    By திருச்செந்தூர்  |   Published on : 09th June 2015 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    திருச்செந்தூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் (பொ) தொ. ராஜநளா தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எபி பனி தேவகிருபை முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இரு சக்கர நாற்காலி, கார்னர் இருக்கை, சி.பி. வாக்கர், ஸ்பிளிண்ட், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai